யாருப்பா நீ...? - கூடைப்பந்தாட்ட போட்டியில் உணவை டெலிவரி செய்ய குறுக்கிட்ட ஊழியர்...! வைரலாகும் வீடியோ...!

Basketball Viral Video
By Nandhini Jan 27, 2023 10:43 AM GMT
Report

கூடைப்பந்தாட்ட போட்டியில் உணவை டெலிவரி செய்ய குறுக்கிட்ட ஊழியரின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உணவை டெலிவரி செய்ய குறுக்கிட்ட ஊழியர்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,

பென்சில்வேனியாவில் நடைபெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியில் உணவை டெலிவரி செய்வதற்காக ஊழியர் ஒருவர் குறுக்கிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பென்சில்வேனியாவில் யுபிஎம்சி கூப்பர் ஃபீல்ட்ஹவுஸில் லயோலா சிகாகோ மற்றும் டுக்ஸ்னே ஆகிய இரு அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது.

அப்போது, விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஒரு டெலிவரி பாய் உணவு ஆர்டரை எடுத்துக்கொண்டு விளையாட்டு நடைபெறும் மைதானத்திற்குள் நுழைந்தார்.

இவரின் செயலால் போட்டி நிறுத்தப்பட்டது. அப்போது, பார்வையாளர்கள் பெரிதும் குழப்பமடைந்தனர். பிறகு, அந்த நபர் கொண்டு வந்த ஆர்டரை உரியவரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார்.

தற்போது இது குறித்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அய்யோ... உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா என்று கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.      

delivery-interrupted-a-college-basketball-game