நாயை போல.. அம்மா அப்பாவை கூட பார்த்துக்க முடியல - கதறி அழுத டெலிவரி ஏஜெண்ட்!
டெலிவரி பாய் கதறி அழுது வெளியிட்ட வீடியோ காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
டெலிவரி பாய் வேதனை
சீனாவில், மஞ்சள் நிற டெலிவரி சீருடை மற்றும் ஹெல்மெட் அணிந்த டெலிவரி செய்யும் நபர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இப்போது நான் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் உணவு டெலிவரி செய்கிறேன்.
ஒரு நாயைப் போல சோர்வடைகிறேன், ஒரு நொடி கூட என்னால் ஓய்வெடுக்க முடியவில்லை. ஏனென்றால் நான் ஓய்வெடுத்தால் அன்றைய தினம் பசியுடன் தூங்க போக வேண்டி இருக்கும். இந்தச் சூழலில் நான் எப்படி கவலைப்படாமல் இருக்க முடியும்?
வீடியோ வைரல்
படிக்கும் காலத்தில் ஒழுங்காக படிக்காமல் பாதிலேயே படிப்பை நிறுத்தியதே இதற்கு காரணம். எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தால், நான் கண்டிப்பாக ஒழுங்காக படிப்பேன். ஆசிரியர்கள் எச்சரித்தும் நான் கேட்காமல் பள்ளியை விட்டு வெளியேறியது தவறு.
என் பெற்றோருக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கையைகூட என்னால் கொடுக்க முடியவில்லை. நான் விரும்பும் வாழ்க்கையை கூட என்னால் வாழ முடியாது.
இது என் இதயத்தை உடைக்கிறது. ஆனால் இதைப் பற்றி நான் யாரிடம் பேச முடியும்? என வேதனை தெரிவித்து கதறி அழுதுள்ளார். இந்த வீடியோ காண்போரையும் கண்கலங்க வைத்துள்ளது.