12 ஆண்டு மோடி ஆட்சியில் முதல் தோல்வி - வெடி வெடித்து கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்

M K Stalin Narendra Modi
By Karthikraja Apr 18, 2026 06:01 AM GMT
Report

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின்வெடி வெடித்து கொண்டாடியுள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை அறிமுகப்படுத்த முன்வந்தது.

இந்த மறுவரையின் மூலம், தென் மாநிலங்களுக்கான நாடாளுமன்ற தொகுதிகள் குறையும் என தென் மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

தமிழ்நாட்டிலிருந்து இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டுமென அதிமுக, மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் தவிர்த்து, திமுக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.  

12 ஆண்டு மோடி ஆட்சியில் முதல் தோல்வி - வெடி வெடித்து கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின் | Delimitation Bill Defeated In The Parliament

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுவது, மசோதா நகலை எரிப்பது உள்ளிட்ட போராட்டங்களை திமுக முன்னெடுத்தது.

மேலும், நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்திருத்தம் மீதான விவாதத்திலும், திமுக எம்பிக்கள் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த மசோதா மீது நேற்று மாலை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவாக 278 பேரும் எதிராக 211 பெரும் வாக்களித்திருக்கின்றனர்.

12 ஆண்டு மோடி ஆட்சியில் முதல் தோல்வி - வெடி வெடித்து கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின் | Delimitation Bill Defeated In The Parliament

அதன்படி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்துள்ளது.

மோடி தலைமையிலான 12 ஆண்டு கால ஆட்சியில், முதல்முறையாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா தோல்வியடைந்துள்ளது.

கடந்த காலங்களில், முத்தலாக் தடை சட்டம், குடியுரிமை திருத்தச்சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து சட்டம், வக்பு திருத்தச்சட்டம் ஆகிய மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு இருந்தாலும், அந்த மசோதாக்கள் வாக்கெடுப்பில் வெற்றி பெற்று தற்போது அமலில் உள்ளன. 

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட நிலையில், நேற்று தேனியில் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த முதல்வர் ஸ்டாலின், வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு கொடுத்து கொண்டாடினார்.