குழந்தைகள் கண்முன்னே இளம்பெண் சரமாரியாக குத்திக்கொலை - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்
டெல்லியின் தென் மேற்கு பகுதியில் இளம்பெண் ஒருவரை பட்டபகலில் அவரது குழந்தைகள் கண்முன்னே மர்ம நபர் ஒருவர் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய போலீசார், “தென் மேற்கு டெல்லி சாகர் பூர் காவல் நிலையத்திற்கு நேற்று பகல் 2 மணியளவில் பிசிஆர் அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர்,பெண் ஒருவர் நடுரோட்டில் கத்திக்குத்து காயத்துடன் கிடப்பதாக தெரிவித்தார்.
நாங்கள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றோம். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் ஆனால் அந்த பெண் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதை தொடர்ந்து அப்பகுதியில் பொருத்தபட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் மர்ம நபர் ஒருவர் இரண்டு குழந்தைகளுடன் நடந்து செல்லும் 24 வயது பெண்ணை துரத்திச் செல்கிறார். அதை தொடர்ந்து 2.10 மணியளவில் அவர் பெண்ணின் குழந்தைகள் கண்முன்னே அந்த பெண்ணை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடுகிறார்.
இந்த கொலை சம்பவம் குறித்து விசாரித்ததில், கத்தியால் குத்திய நபர் அந்த பெண் வசித்திருந்த முந்தைய வட்டின் அருகில் வசித்தவர் என தெரிய வந்துள்ளது. கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
இதுகுறித்து கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உயிரிழந்த பெண் ஆரத்தி என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை அடையாளம் காணவும், கண்டுபிடித்து கைது செய்யவும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan