டெல்லி மெட்ரோ ரயில் நிலைய மாடியில் இருந்து குதித்த இளம் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

suicideattempt delhiteendies metrostation
By Swetha Subash Apr 15, 2022 08:28 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

டெல்லியில் மெட்ரோ ரயில் நிலைய மாடியில் இருந்து குதித்த இளம் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

டெல்லியில் அக்ஷர்தம் மெட்ரோ நிலையத்திற்கு வந்த இளம்பெண் ஒருவர், மெட்ரோ இரயில் நிலையத்தின் மாடிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் மேலே இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயற்சித்தார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு படை அதிகாரிகள், அவரிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். அவை எதனையும் கேட்காத பெண்மணி தற்கொலை செய்வதில் உறுதியாக இருந்த நிலையில், மெட்ரோ இரயில் நிலையத்தில் பாதுகாப்பில் இருந்த சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகள் சுதாரித்து கீழே பொதுமக்கள் உதவியுடன் போர்வையை விரித்து வைத்து காத்திருக்க சொல்லியுள்ளனர்.

இதனையடுத்து, அப்பெண்ணிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து, அவர் தற்கொலை முடிவில் உறுதியாக கீழே குதித்தார்.

கீழே இருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பெண்ணை பத்திரமாக போர்வையில் குதிக்கும்படி மீட்டுள்ளனர். இதில் அந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

பஞ்சாப்பின் ஹோசியார்பூர் பகுதியை சேர்ந்த அந்த இளம்பெண், அரியானாவின் குருகிராமில் பணிபுரிந்து வந்துள்ளார். சமீபத்தில் அவர் வேலையில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.