திடீரென சுவர் இடிந்து விழுந்து 4 பேர் சம்பவ இடத்தில் பலி - டெல்லியில் பரபரப்பு சம்பவம்

Death
By Nandhini Jul 15, 2022 10:08 AM GMT
Report

சுவர் இடிந்து விழுந்து விபத்து

டெல்லியில் அலிப்பூரில் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 10 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதையடுத்து, மீட்புப் பணிகள் அங்கு துரிதமாக செயல்பட்டு வருகிறது. 

dead