ராஜஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி அணி..!

Delhi Capitals Rajasthan Royals TATA IPL
By Thahir May 11, 2022 06:18 PM GMT
Report

இந்தாண்டின் 15வது ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்,டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது.

ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக விளையாடி 50 ரன்னும்,தேவ்தத் படிக்கல் 48 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது டெல்லி அணி.

தொடக்க ஆட்டக்காரர் ஸ்ரீகர் பரத் டக் அவுட்டானார்.அடுத்து டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ் பொறுப்புடன் ஆடினார்.

இருவரும் கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர். இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர். மிட்செல் மார்ஷ் 89 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், டெல்லி அணி 18.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.