விபச்சார விடுதியில் துப்பாக்கிச் சூடு - 2 பேர் சம்பவ இடத்தில் பலி.. - அதிர்ச்சி சம்பவம்...!

Delhi
By Nandhini Mar 07, 2023 02:06 PM GMT
Report

டெல்லியில், விபச்சார விடுதியில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபச்சார விடுதியில் துப்பாக்கிச் சூடு

டெல்லி, கமலா மார்க்கெட் பகுதியில், ஜிபி சாலையில் உள்ள விபச்சார விடுதியில் இன்று மதியம் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண்ணும், ஒரு ஆணும் காயமடைந்துள்ளனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தி தலைமறைவான மர்மநபர்கள் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

delhi-shooting-at-a-brothel