மோசமடையும் காற்று .. மூடப்படும் பள்ளிகள் ? - குழப்பத்தில் மாநில் அரசு
மாறி வரும் இந்த காலச் சூழலில் விஞ்ஞானம் விரல் நுனியில் உள்ளது , அதே சமயம் மனித் வாழ்க்கைக்கு தேவையான நிலம், நீர், காற்று இவை மூன்றும் தற்போது மாசடைந்து வருகின்றது .
இந்த மூன்றும் சுத்தமாக வைத்திருக்க உலக நாடுகள் பலவும் பல சட்டங்களையும் கோரிக்கைகளையும் முன் வைத்து வருகின்றன.
மாசடையும் டெல்லி
அந்த வகையில் இந்தியாவை பொறுத்தவரை தலை நகர் டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது, கடந்த சில நாட்களாக இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

இதன் காரணமாக டெல்லியில் உள்ள 10 -ல் 8 குழைந்தைகள் சுவாச கோளாறு பிரச்சினைக் காரணமாக மருத்துவமனைக்கு வருவதாக தரவுகள் வெளியாகியுள்ளன.
அச்சத்தில் குழைந்தைகள்
இந்த நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தலைவர் பிரியங்கானுங்கோ டெல்லி தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில் காற்று மாசு மிகவும் மோசமாக உள்ளதாக கூறியுள்ளார், இதன் காரணமாக டெல்லியில் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
மேலும் இந்த விவகாரத்தை அலட்சியமாக எடுத்துக்கொள்ளகூடாது என கூறியுள்ள அவர் , காற்று மாசு தற்போது அதிகமாக உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும்படி கூறியுள்ளார்.
இந்த விவகாரம் டெல்லியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.