மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயது 21 ஆக குறைப்பு

law drink delhi alcohol age
By Jon Mar 23, 2021 05:07 PM GMT
Report

டெல்லியில் மது அருந்துவதற்கான சட்டபூர்வ வயது 21 ஆக குறைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மது அருந்துவதற்கான வயது வரம்பு இதுவரை 25 ஆக இருந்த நிலையில் தற்போது 21 ஆக குறைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் புதிய மதுக்கொள்கையை அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வெளியிட்டார்.

மனிஷ் சிசோடியா மேலும் கூறுகையில் “ மதுபானக்கடைகளை அரசு நடத்தாது. புதிய சீர்திருத்தங்கள் மூலம் அரசின் ஆண்டு கலால் வருவாய் 20 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கிறோம். டெல்லியில் புதிதாக மதுபானக்கடைகள் திறக்கப்படாது.

சர்வதேச தரத்தில் மதுபானக்கடைகள் கட்டப்பட வேண்டும். மதுபானக்கடைகள் அருகே பொது இடங்களில் மது குடிப்பதை தடை செய்வது மதுபான கடை உரிமையாளரின் பொறுப்பாகும்” என்றார்.