தேச துரோகி என்பார்கள்: டெல்லி மாணவர்கள் போராட்டத்துக்கு பெருகும் ஆதரவு
நீட் தேர்வு முறைகேடு உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு இந்தியா முழுவதும் ஆதரவு பெருகுகிறது.
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முடிவுகளில் நடந்த முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று டெல்லியில் நடந்த பேரணியின் போது போலிசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தை கலைத்தனர்.
இது ஜனநாயகத்துக்கு எதிரானது என இந்தியா முழுவதும் ஆதரவு பெருகிவரும் நிலையில், பிரபல பஞ்சாபி பாடகரான தில்ஜித் தோசாஞ்ச் ஆதரவை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராமில், மாணவர்களை இப்படி நடத்தியிருக்க கூடாது, அவர்களின் கோரிக்கைகளை கேட்டு பரிசீலிக்க வேண்டும், மக்களின் குரலே கடவுளின் குரல், என்னை தேசவிரோதி என அழைக்கக்கூடும் என பதிவிட்டுள்ளார்.