சரக்கு வச்சிருக்கேன்...இறக்கி வச்சிருக்கேன்...இது என்ன போலீஸ் ஸ்டேசனா இல்ல சொகுசு பாரா?
டெல்லி காவல் நிலையம் ஒன்றில் குற்றவாளிகள் கூட்டமாக மது அருந்தும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட சகோதரர்களான ராகுல் காலா மற்றும் நவீன் பாலி ஆகியோர் காவல்நிலையத்தில் விசாரணைக்காக சிறைப்படுத்தப்பட்டிருந்தனர்.
பிரபல ரெளடி நீரஜ் பாவனா உடன் சிறைப்படுத்தப்பட்ட இவர்களின் விடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

காவல்நிலைய சிறைக்குள் சகல வசதிகளுடனும் மதுபானம் அருந்தும் இந்த விடியோ தற்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதேபோல் சிறைக்குள் செல்போன் பயன்படுத்தப்பட்டுள்ளதும் அந்த விடியோவில் பதிவாகியுள்ளது.
Video | Gangsters are seen enjoying liquor, snacks inside police lock-up in Delhi pic.twitter.com/pjySJ1DMJX
— The Indian Express (@IndianExpress) August 25, 2021
இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.