நீங்க போலீஸ் இல்ல எங்க குலசாமி - விரைந்து சென்று உயிரை காப்பாற்றிய காவல்துறை
தற்கொலை செய்து கொள்ள முயன்றவரை விரைந்து சென்று நான்கே நிமிடங்களில் காப்பாற்றியுள்ளனர் டெல்லி காவல்துறையினர்.
தென்கிழக்கு டெல்லியில் ஜாமியா நகரில் பணப் பிரச்னை காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆட்டோ ரிக்சா ஓட்டுநரை டெல்லி காவல்துறையைச் சேர்ந்த இருவர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
தற்கொலைக்கு முயன்றவரின் தாய் காவல்துறையினருக்கு தக்க சமயத்தில் தகவல் கொடுத்ததாகவும் நான்கே நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றதாகவும் டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் மேலும் கூறுகையில், "சார்பு ஆய்வாளர் ராமதாஸ், தலைமை காவலர் மகேந்திர சிங் ஆகியோர் அப்பெண்ணின வீட்டிற்கு விரைந்து சென்றுள்ளனர்.
உள்ளிருந்து தாழிடப்பட்ட அறைவின் கதவுகளை உடைத்து காவல்துறையினர் உள்ளே சென்றனர். அந்த நபரை காப்பாற்றிய பிறகு, எதற்கு தற்கொலை முயற்சி எடுத்துள்ளீர்கள் என காவல்துறையினர் அவரிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், தனக்கு பண நெருக்கடி ஏற்பட்டதாகவும் தனது ஆட்டோவை விற்க தாய் முயற்சித்ததாகவும் அவர் பதிலளித்தார்.
இதையடுத்து அவரின் குடும்பத்தினர் விரைந்து சென்று போலீசால் காப்பாற்றியதற்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர் மேலும் போலீசாரை தங்கள் குல சாமி என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.