டெல்லி வன்முறையில் தனியாக மாட்டிக் கொண்ட போலீஸ்: அரணாக பாதுகாத்த விவசாயிகள்- வைரலாகும் வீடியோ

india protest tractor
By Jon Jan 26, 2021 06:46 PM GMT
Report

டெல்லி வன்முறையின் போது தனியாக மாட்டிக்கொண்டு போலீஸ் அதிகாரியை விவசாயிகள் பாதுகாத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று டிராக்டர் பேரணி நடந்தது.

12 மணிக்கு முன்பே விவசாயிகள் பொலிசார் அமைத்த தடுப்புகளை மீறி டெல்லிக்குள் நுழைய முயன்றதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. மேலும் அனுமதிக்கப்பட்ட வழிகளை தவிர மற்ற வழிகளில் விவசாயிகள் செல்ல முயன்றதால் தடியடி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி பொலிசார் தடுத்தனர்.

இந்நிலையில் போராட்டக்காரர்களிடையே போலீஸ் அதிகாரி ஒருவர் தனியாக சிக்கிக்கொள்ள அவரை பத்திரமாக அனுப்பிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. அதில், குறித்த போலீஸ் அதிகாரியை விவசாயிகள் சிலர் எதிர்ப்பாளர்கள் போலீஸ் மீது தாக்குதல் நடத்தா வண்ணம் பாதுகாத்து பத்திரமாக அனுப்பி வைத்தனர்.