டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரருக்கு கொரோனா தொற்று உறுதி - தனிமையில் அணி வீரர்கள் ; ரசிகர்கள் அதிர்ச்சி!

covidpositive Delhicapitals Australianplayer punetrip delhiplayer bcciorders playersinquarantine
By Swetha Subash Apr 18, 2022 08:48 AM GMT
Report

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் வீரர் ஒருவருக்கு இன்று காலை நடந்த கொரோனா பரிசோதனையில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி த்னது 5-வது வெற்றியை பதிவு செய்தது குஜராத் டைடன்ஸ் அணி. இதன்மூலம் புள்ளி பட்டியளிலும் முதல் இடத்தில் உள்ளது குஜராத்.

நாளை நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்ரவுண்டர் என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து டெல்லி வீரர்களை அவர்கள் தங்கியிருக்கும் அறைகளிலேயே இருக்கும்படி பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான சூழலில், டெல்லி அணி வீரர்களின் புனே பயணம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

நாளை நடைபெறும் போட்டிக்காக புனே செல்ல தயாராக இருந்த வீரர்கள் இன்று அவர்களது அறையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே அவர்கள் போட்டி நடக்கும் இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என தெரிகிறது.