டெல்லி சென்ற முதல்வர் பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்
2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.டெல்லியில் உள்ள அமித்ஷா இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது அமைச்சர் ஜெயக்குமார், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் முதலமைச்சரின் செயலாளரும் உடன் இருந்தனர். நாளை காலை, 10.30 மணி அளவில் பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார். அப்போது, சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டு வரும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவும்.
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டவும் பிரதமருக்கு, முதலமைச்சர் பழனிசாமி அழைப்பு விடுக்க உள்ளார்.