கணவர் கண்முன்னே கள்ள காதலனுடன் உல்லாசம் - காதலனுக்கு கொடூர சித்திரவதை

Delhi Death
By Karthikraja Dec 17, 2024 04:00 PM GMT
Report

மனைவியின் கள்ளக்காதலனை கையும் களவுமாக பிடித்த கணவர் கொடூரமாக சித்திரவதை செய்துள்ளார்.

திருமணம் மீறிய உறவு

டெல்லி சாஸ்திரி பார்க் பகுதியை சேர்ந்தவர் அஜ்மத். அஜ்மத்தின் மனைவி, ரித்திக் வர்மா(21) என்ற டெம்போ டிரைவரோடு திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

delhi shastri park

இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் அஜ்மத் வீட்டிற்கு சென்ற போது, அவரின் மனைவியும் ரித்திக் வர்மாவும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

உயிரிழப்பு

இதனை கண்டு ஆத்திரமடைந்த அஜ்மத், தனது மனைவி மற்றும் ரித்திக் வர்மாவை சரமாரியாக தாக்கியுள்ளார். தகவலறிந்த அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மயங்கி கிடந்த ரித்திக் வர்மாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

delhi shastri park Ritik death

ஆனால் சிகிச்சை பலனின்றி இரவு 9 மணியளவில் ரித்திக் வர்மா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரித்திக் வர்மாவின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், நகங்கள் பிடுங்கப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.