டெல்லி நாடாளுமன்றத்தில் கால்பதிக்கிறது தவெக?

TVK
By Fathima May 19, 2026 03:22 AM GMT
Report

சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம்கண்ட தவெக திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது.

இதற்கிடையே அதிமுக-வின் ஒரு பிரிவினர் தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

முதலமைச்சர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளிலும் போட்டியிட வெற்றி வெற்றார், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த சிவி சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார், இதனால் அவர் வகித்து வந்த மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றிய தவெக-வுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்.

இதன்மூலம் சட்டப்பேரவையை கைப்பற்றியதோடு மாநிலங்களவையிலும் கால்பதிக்கவுள்ளது தவெக.