டெல்லியில் குண்டுவெடிப்பு: பதற்றம் மேலும் அதிகரிப்பு

investigation injuries nature
By Jon Jan 29, 2021 04:38 PM GMT
Report

டெல்லியில் இஸ்ரேல் தூதரகத்துக்கு அருகே இன்று மாலை குண்டுவெடித்ததில் 4 கார்கள் சேதமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, தூதரக கட்டிடத்திற்கு வெளியே நடைபாதையில் குண்டு வெடித்ததாகவும், அருகிலேயே நிறுத்தப்பட்டிருந்த நான்கு அல்லது ஐந்து கார்களின் விண்ட்ஸ்கிரீன்கள் சேதமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த குண்டுவெடிப்பு விஜய் சௌக்கிலிருந்து 2 கி.மீ தொலைவில் நடந்ததாக தெரியவந்துள்ளது.

இதில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை, குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.