அவர் பேசினால் உங்கள் கதை முடிந்துவிடும்! அதிமுக வை எச்சரித்த செங்கோட்டையன்

Vijay Thamizhaga Vetri Kazhagam K. A. Sengottaiyan
By Fathima Feb 09, 2026 06:05 AM GMT
Report

தவெக தலைவர் விஜய் வாய் திறந்த பேசினால் எதிர்க்கட்சிகளின் கதை முடிந்துவிடும் என தெரிவித்துள்ளார் தவெக மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்.

கோபி செட்டிபாளையத்தில் நேற்று நடைபெற்ற தவெக ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு செங்கோட்டையன் பேசினார்.

அப்போது, அதிமுக என்னை தூக்கி வீசிய பிறகு, ஒரு நொடியில் என்னை தூக்கிவிட்டவர் விஜய், நாளை தமிழகத்தை ஆளப்போகிற தலைவர் அவர்.

அவர் பேசினால் உங்கள் கதை முடிந்துவிடும்! அதிமுக வை எச்சரித்த செங்கோட்டையன் | Delhi Is Afraid Of Vijay Sengottaiyan

விஜய்யை கோட்டைக்கு அனுப்பும்வரை நான் ஓயப்போவதில்லை. உலக நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்கள் விஜய்க்காக வாக்களிக்க வரவுள்ளனர்.

அவர் பேச வேண்டும் என கூறும் எதிர்க்கட்சியினருக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன், அவர் பேசினால் உங்கள் கதை முடிந்துவிடும், எதை பேச வேண்டுமோ, எப்போது பேச வேண்டுமோ, அதை அப்போது பேசுவார்.

அவர் பேசிய பின்னர் இந்தியாவே திரும்பி பார்க்கும் தலைவராக மாறுவார், அவர் தமிழகத்தின் முதல்வரானால், உயிரோடு இருக்கும்வரை அவர்தான் முதல்வர்.

அவர் பேசினால் உங்கள் கதை முடிந்துவிடும்! அதிமுக வை எச்சரித்த செங்கோட்டையன் | Delhi Is Afraid Of Vijay Sengottaiyan

ஜனநாயகத்தை காப்பாற்ற ஒரு தலைவர் வந்துவிட்டார், தவெகவுக்கு மட்டுமே 42 சதவிகித வாக்கு உள்ளது.

மற்ற கட்சிகள் அனைத்தும் சேர்ந்தே இதை தான் எடுக்கும், நாம் தனியாகவே இதை வைத்துள்ளோம், டெல்லி நம்மை பார்த்து பயப்பட இதுதான் காரணம், தலைவர் அறிக்கை விட்டாலே ஒன்றரை கோடி பேர் பார்க்கிறார்கள், ஆனால் மாற்று கட்சியினருக்கு அப்படி கிடையாது என பேசி தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

அவர் பேசினால் உங்கள் கதை முடிந்துவிடும்! அதிமுக வை எச்சரித்த செங்கோட்டையன் | Delhi Is Afraid Of Vijay Sengottaiyan