டெல்லியில் நீதிபதி முன் ரவுடிகள் சுட்டு கொலை - அதிர்ச்சி சம்பவம்: பதைபதைக்கும் காட்சி

Delhi gunshot
By Anupriyamkumaresan Sep 24, 2021 12:25 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

டெல்லி ரோகினி கீழமை நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி முன் ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று டெல்லியில் இருக்கக்கூடிய ரோகினி கீழமை நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி முன் ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர்.. நாட்டு துப்பாக்கிகளை கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் உத்திரபிரதேசம், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பிரபலமானவனாக அறியப்பட்ட ரவுடி ஜிதேந்தர் கோகி என்பவன் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் நீதிபதி முன் ரவுடிகள் சுட்டு கொலை - அதிர்ச்சி சம்பவம்: பதைபதைக்கும் காட்சி | Delhi Infront Of Judge Rodies Killed

அதுமட்டுமில்லாமல் 3 பேர் இந்த துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரில் 2 பேர் வழக்கறிஞர் உடை அணிந்து வந்தது தெரியவந்துள்ளது.

மேலும் 10க்கும் மேற்பட்டோர் இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து இருப்பதாகவும் தகவல் வந்து கொண்டிருக்கிறது. தலைநகர் டெல்லியில் அதுவும் நீதிமன்ற வளாகத்தில் இத்தகைய துப்பாக்கிச்சூடு நடந்து இருக்கிறது.

இது முதல் முறை அல்ல. ஏற்கனவே பலமுறை இது மாதிரியான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறும், காயங்கள் ஏற்படும். ஆனால் தற்போது 4 பேர் உயிரிழந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

சமீபகாலமாக தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வரும் நிலையில், வெளிப்படையாக டெல்லியில் இருக்கக்கூடிய ஒரு நீதிமன்ற வளாகத்திலேயே துப்பாக்கி சூடு என்பது நடந்திருக்கிறது.

நீதிமன்ற வளாகத்திற்குள் அந்த அளவிற்கு செக்யூரிட்டி செக்கிங் எல்லாம் இல்லாமல் இருக்கிறதா? என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில், யார் இதை செய்தார்கள்? என்ன காரணத்திற்காக இது நடந்தது? என்று போலீசார் விசாரணை முடுக்கி விடப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் சொல்லப்படுகிறது.