நிலமோசடி வழக்கில் சிக்கிய திருவிதாங்கூர் மன்னர் குடும்பம்- ராஜ குடும்பத்தினர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

delhi-india-modi
By Jon Jan 10, 2021 07:31 AM GMT
Report

போலி ஆவணங்களை காட்டி நிலம் விற்பனை புகார் தொடர்பாக திருவிதாங்கூர் ராஜ குடும்பத்தினர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

நிலமோசடி வழக்கில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அடையாறில் உள்ள திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திற்கு சொந்தமான ஒரு பகுதியினை கடந்த 1994-ம் ஆண்டு சிங்கார வேலன் என்பவர் வாங்கினார்.

இந்த நிலையில், அந்த சொத்துக்களை மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள், போலி ஆவணங்களை காட்டி, விற்றதாக சிங்காரவேலன் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இந்த வழக்கு பற்றி விசாரணைக்கு மன்னர் குடும்பத்தினர், ஜனவரி 11-ம் தேதி நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.