டெல்லியிலும் பறவைக் காய்ச்சசல் பரவத்தொடங்கியதா? அடுத்தடுத்து செத்து மடிந்த காகங்கள்
டெல்லியில் காகங்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அங்கேயும் பறவைக் காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளதா என்ற அச்சத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பிரச்சனை ஓய்வதற்குள் தற்போது இந்தியாவில் புதிதாக பறவைக் காய்ச்சல் பிரச்சனை படையெடுத்துள்ளதுள்ளது.
இந்தியாவில் ராஜஸ்தான்,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. தற்போது டெல்லியிலும் இதன் வேகம் அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களாக டெல்லியில் மயுர்விகார் பகுதி-3, துவாரகா பகுதி-9 போன்ற சில இடங்களில் காகங்கள் ஆங்காங்கே செத்து விழுந்தன.
அந்த பகுதிகளில் உள்ள பூங்காக்களில் செத்து விழுந்த காகங்களை துப்புரவு பணியாளர்கள் அகற்றினர். சுமார் 100-க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்ததாக கூறப்படுகிறது. பறவை காய்ச்சல் பரவலால் காகங்கள் இறப்பதாக பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையே, கால்நடைத்துறை அதிகாரிகள் அந்த பூங்காக்களுக்கு சென்று காகங்களின் மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைப்போல் கோழிகளின் மாதிரிகளையும் அவர்கள் சேகரித்தனர்.
இந்த மாதிரிகள் போபால் மற்றும் ஜலந்தரில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.