டெல்லியில் ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில் சேவையினை மோடி தொடக்கி வைத்தார்

india rain modi
By Jon Dec 28, 2020 12:34 PM GMT
Report

நாட்டிலேயே முதன் முதலாக ஒட்டுநர் இல்லாத ரயில் சேவையினை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

நாட்டிலேயே முதல்முறையாக ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரெயில்போக்குவரத்தை டெல்லியில் பிரதமர் மோடி இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

மெட்ரோ ரெயில் சேவையில் தொழில்நுட்பத்தின் புதிய வடிவமாக ஓட்டுநர் இல்லாத தானியங்கி தொழில்நுட்பத்தில் இயங்கும் ரெயில் சேவையினை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

  37 கி.மீ. தூரம் கொண்ட மெஜந்தா நிற லைன், பிங்க் நிற லைனில் மஜ்லிஸ் பூங்கா முதல் ஷிவ் விஹார் வழித்தடத்தில் அறிமுகமாகும் இந்த சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திங்கட்கிழமை இன்று காலை 11 மணிக்கு தொடங்கி வைத்தார்.

மேலும் அனைத்து வழித்தடங்களிலும் பயணிகள் பயன்படுத்தும் வகையிலான தேசிய பொது பயண அட்டையையும் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.