கணவனை 22 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்த மனைவி, மகன் - பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்...!

Attempted Murder Delhi
By Nandhini Nov 28, 2022 02:13 PM GMT
Report

டெல்லியில் கணவனை, மனைவியும், மகனும் சேர்ந்து 22 துண்டுகளாக வெட்டிய கொடூரம் சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்தவர் அஞ்சன் தாஸ். இவர் லிப்ட் மேனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பூனம் (48). பூனத்தின் முதல் கணவர் கல்லு என்பவர் இறந்துபோக அஞ்சனுவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். மரணமடைந்த முதல் கணவருக்கு பிறந்த மகன்தான் தீபக் (25) அஞ்சன் தாஸூக்கும் பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணமாகி 8 குழந்தைகள் உள்ளன.

வெட்டி கொலை செய்த மனைவி - மகன் 

இந்நிலையில், அஞ்சன் தான் வேலைக்கு செல்லாமல் சுற்றி திரிந்து வந்துள்ளார். மேலும், பூனத்தின் நகை மற்றும் பணத்தை திருடி பூகாரில் உள்ள 8 குழந்தைகளுக்கு அனுப்பியதால் பூனம் கோபமடைந்துள்ளார்.

இதனையடுத்து, பூனம் மற்றும் தீபக் இருவரும் சேர்ந்து அஞ்சனுக்கு மதுவை குடிக்க வைத்து, அதில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளனர்.

தூக்க மாத்திரையை சாப்பிட்டு மயங்கிய அஞ்சன் தாஸை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். ஒரு நாள் முழுவதும் ரத்தம் வடியட்டு, மறுநாள் உடலை 22 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்துள்ளனர். பிறகு, ஒவ்வொரு உடல் உறுப்புகளாக பல பகுதிகளில் எறிந்து வந்துள்ளனர்.

delhi-husband-murder-22-pieces-wife-son-arrest

உடல் உறுப்பை கைப்பற்றிய போலீசார்

கடந்த ஜூன் மாதம் பாண்டவ் நகரில் கிடந்த மனித உடல் உறுப்பு இருப்பதைப் பார்த்த மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த உடல் உறுப்பை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால், உடல் பாகங்கள் சிதைந்திருப்பதால் அடையாளம் காணமுடியவில்லை.

மனைவி - மகன் கைது

இதனையடுத்து, கண்காணிப்பு கேமிரா போலீசார் சோதனை செய்தபோது, தீபக் நள்ளிரவில் ஒரு பையில் வைத்து உடல் பாகங்களை கொண்டு செல்வது பதிவாகி இருந்தது.

அவருக்கு பின்னால் அவரது தாயார் பூனம் செல்வதும் அந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதைத்தொடர்ந்து பூனம், தீபக் ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் விசாரணையில் நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் அஞ்சன் தாஸை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, கொலை தொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.