முடி வெட்ட செல்பவர்களே கேட்டுக்கோங்க - அதிகமாக வெட்டப்பட்ட வழக்கில் அதிரடி தீர்ப்பு
மாடலிங் பெண்ணுக்கு அதிக முடி வெட்டிய அழகு நிலையத்திற்கு ரூ. 2 கோடி அபராதம் விதித்து தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த மாடலிங் அழகியான தாரா சரண் என்ற இளம்பெண் டெல்லியில் உள்ள ஹோட்டலில் உள்ள சொகுசு அழகு நிலையத்திற்கு சென்றுள்ளார்.அங்கு தனது நீண்ட கூந்தலில் இருந்து நான்கு அங்குலம் அளவுக்கு மட்டும் முடி வெட்ட கூறியுள்ளார். ஆனால் மொத்த முடியின் நீளமே 4 அங்குலம் உள்ளது போல அதிக அளவில் முடி திருத்துபவர் வெட்டியுள்ளார்.
இதனால் அதிருப்தியடைந்த அப்பெண் சம்மந்தப்பட்ட கடை நிர்வாகத்தினரிடம் புகார் தெரிவித்த நிலையில் தலை முடிக்கான சிகிச்சை இலவசமாக பெண்ணுக்கு கொடுக்கப்பட்டது. அதேசமயம் முடி குறைக்கப்பட்டதால் அவரது மாடலிங் வாய்ப்புகள் அடுத்தடுத்த நாட்களில் வெகுவாக குறைந்துள்ளது.
இதனால் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அழகுநிலையம் தனக்கு ரூ.3 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என தாரா சரண் நுகர்வோர் ஆணையத்திடம் முறையிட்டார்.இந்த வழக்கை விசாரித்த தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் ஆர்.கே.அகர்வால் அவர்கள் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
முடி திருத்த கடைக்கு அந்தப் பெண் அதிக அளவில் பணத்தை செலவிட்டதுடன் முடியும் பாதிப்புக்குள்ளாகி உள்ளதால் அவர் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார் என தெரிவித்த ஆணையம், கடை நிர்வாகம் தாராசரணுக்கு ரூ.2 கோடி இழப்பீடு தொகையை எட்டு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.