மலையாளம் பேசக்கூடாதா? - பின்வாங்கியது டெல்லி மருத்துவமனை
டெல்லியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியர்கள் மலையாளம் பேசக்கூடாது என்ற சுற்றறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது.
டெல்லியில் உள்ள கோவிந்த் பல்லப் பந்த் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) பணியாற்றும் செவிலியர்கள் மலையாளத்தில் பேசக்கூடாது என்றும், பணியில் இருக்கும்போது தொடர்பு மொழியாக இந்தி அல்லது ஆங்கிலத்தையே பயன்படுத்தவேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த மருத்துவமனையில் கேரளாவைச் சேர்ந்த செவிலியர்கள் அதிக அளவில் பணியாற்றுகின்ற நிலையில் இந்த உத்தரவுக்கு செவிலியர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அந்த சுற்றறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் இன்று வாபஸ் பெற்றுள்ளது.