கொரோனா 3வது அலை பரவலில் உதவ 5,000 இளைஞர்களுக்கு பயிற்சி

Delhi Arvind Kejriwal Covid 3Rd wave
By Petchi Avudaiappan Jun 16, 2021 03:46 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

 மருத்துவர்களுக்கு உதவுவதற்காக 5 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை தாக்கம் தற்போது குறைந்து வரும் நிலையில், மூன்றாவது அலையை எதிர்கொள்ள பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உதவுவதற்காக 5 ஆயிரம் இளைஞர்களுக்கு மருத்துவ உதவியாளர் பயிற்சி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதில் முதற்கட்டமாக 500 இளைஞர்களுக்கு ஜூன் 28 ஆம் தேதி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இணையதள வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு உரிய பயிற்சிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ப ஊதியம் வழங்கப்படும் என்றும் டெல்லி அரசு கூறியுள்ளது.