டெல்லியில் உள்ள நவீன அரசு பள்ளிகளை பார்வையிடும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

school delhi mkstalin cmvist
By Irumporai Apr 01, 2022 06:49 AM GMT
Report

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு. டெல்லியில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்து பேசினார். 

இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார். அப்போது, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

டெல்லியில் நவீன வசதிகளுடன் உள்ள அரசு பள்ளியை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து, முதலமைச்சர் முக ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார். அரசு பள்ளிகளை காணொளி மூலம் பார்வையிட்டு, அங்குள்ள வசதிகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.

இந்த சந்திப்பின்போது, தலைமை செயலாளர் இறையன்பு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், டிஆர் பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும், டெல்லியில் அரசு பள்ளியில் செய்யப்பட்டுள்ள நவீன வசதிகள் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின், சோனியா காந்தி, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்திருந்த நிலையில், தற்போது டெல்லி முதல்வரை சந்திருக்கிறார்.