டெல்லி செல்ல 5 மாநிலங்களுக்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டது
டெல்லி செல்ல 5 மாநிலங்களுக்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்தியாவில் 5 மாநிலங்களில் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் அந்த மாநிலத்தில் இருந்து வருபவர்கள் பிப்.26 முதல் கொரோனா இல்லை என்ற சான்றிதழை எடுத்துச்செல்வது அவசியம் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. டெல்லி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
* மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப் மாநிலத்தவர்களுக்கு டெல்லிக்குள் நுழைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. * 5 மாநிலத்தை சேர்ந்தவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே டெல்லிக்குள் அனுமதிக்கப்படுவர்.
* பிப்.26 முதல் மார்ச் 15ந்தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் தொடரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.