டெல்லி வணிக கட்டிட தீ விபத்து - உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நிவாரணம் அறிவிப்பு..!

Narendra Modi Delhi
3 நாட்கள் முன்

டெல்லி வணிக கட்டிட தீ விபத்தில் உயிழிந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே இன்று மாலை 3 மாடி வணிகக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீ விபத்தில் இருந்து 50 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும்,மேலும் பலர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் மேலும் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக டெல்லி தீயணைப்பு சேவை துணை தலைமை தீயணைப்பு அதிகாரி சுனில் சவுத்ரி கூறுகையில், 3 மாடி கட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 26 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.50 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் டெல்லி வணிக கட்டிட தீ விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.