வேளாண் சட்டங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம்: மத்திய அரசு
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் இரண்டு மாதங்களை நெருங்கி வருகிறது. இதற்கிடையே நடைபெற்ற அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன. சட்டங்களை பின்வாங்கும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துவிட்டனர்.
இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கு உச்சநீதிம்ன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மூன்று சட்டங்களையும் நிறைவேற்ற உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அதோடு வேளாண் சட்டங்கள் தொடர்பாக விசாரிக்க நான்கு பேர் கொண்ட குழுவையும் அமைத்துள்ளது.
ஆனால் இந்தக் குழுவின் உறுப்பினர்கள் நால்வரும் வேளாண் சட்டஙகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் இந்தக் குழுவின் முன் ஆஜராகப்போவதில்லை என விவசாயிகள் தெரிவித்துவிட்டனர். தற்போது வேளாண் சட்டங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்தாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
மேலும் உச்சநீதிமன்றம் அமைத்த குழுவின் முன் தங்கள் தரப்பு வாதத்தை தெரிவிக்க தயார் என்றும் கூறியுள்ளார்.