டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை - தொடரும் துயர சம்பவம்!

delhi-farmers-protest
By Jon Jan 11, 2021 01:39 PM GMT
Report

டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளில்மேலும் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் 46-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசு 8 முறையாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அவையணைத்தும் தோல்வியில்தான் முடிந்தது. மத்திய அரசு தங்கள் போராட்டத்தை மதிப்பதில்லை மற்றும் வேளாண் சட்டங்களை ரத்து செய்யவில்லை என்ற ஏக்கத்தில் பல விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவமும் நடந்து வருகிறது.

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் பதேக்ராப் சாகிப் மாவட்டத்தை சேர்ந்த 40 வயதான விவசாயி அம்ரீந்தர் சிங் டெல்லி எல்லையான சிங்கு பகுதியில் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். மத்திய அரசின் பேச்சுவார்த்தைகள் அணைத்தும் தோல்வியில் முடிவதால் அம்ரீந்தர் சிங் மிகுந்த மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அம்ரீந்தர் சிங் ச போராட்ட களத்தில் நேற்று இரவு விஷம் குடித்துள்ளார். அவர்விஷம் குடித்தது பற்றி அறிந்த சக விவசாயிகள் அவரை அரியானாவில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றனர் மருத்துவமனையில் அமரீந்தர் சிங் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என அறிவித்தனர்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகள் விஷம் குடித்து தற்கொலை செய்யும் சம்பவம் போராட்டத்தில் பங்கு பெற்றுள்ள விவசாயிகள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.