டெல்லி போராட்ட மைதானத்தில் வெங்காய சாகுபடி செய்யும் விவசாயிகள்

INDIA FARMERS PROTEST
By Jon Dec 27, 2020 01:20 PM GMT
Report

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லி எல்லைப் பகுதிகளில் 32வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், புராரி மைதானத்தில் போராட்டத்தில்ஈடுபட்டு வரும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான வெங்காயத்தை மைதானத்திலேயே சாகுபடி செய்கின்றனர்.

இதற்காக மைதானத்தின் ஒரு பகுதியில், வெங்காய நாற்றுகளை நடவு செய்து அதற்கு தேவையான தண்ணீரை தெளிக்கின்றனர்.

ஒரு மாத காலமாக விவசாயம் செய்யாமல் இருப்பதால், தங்களது சமையல் தேவைக்காக மைதானத்தில் வெங்காய சாகுபடி செய்திருப்பதாகவும், மேலும் சில பயிர்களை பயிரிட திட்டமிட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.