டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவல் - ஜி.கே.வாசன்
டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். டெல்லியில் விவாஸ்யைகள் நடித்த வரும் உரிமை போராட்டத்தில் சமூக விரோதிகளை ஊடுருவ செய்து நாட்டிற்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், டெல்லியில் 60 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கட்டுக்கோப்பாக போராடி வந்ததாகவும், போராட்டத்தில் ஊடுருவிய சில சமூக விரோதிகளால் தேசத்திற்கும், விவசாயிகளுக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த சமூக விரோதிகளை கண்டறிந்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.