ஆணிமுட்கள் பதித்தவர்களுக்கு பூஞ்செடி மூலம் பதில் கொடுத்த வேளாண் குடிகள்!

protest government bjp
By Jon Feb 08, 2021 01:48 PM GMT
Report

இரண்டு மாதங்களாக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் குடியரசுதினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை ஏற்பட்டது. ஆனால், விவசாயிகள் போராட்ட முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. இதனால் விவசாயிகளை டெல்லிக்குள் விடாமல் தடுப்பதற்காக நடுரோட்டில் ஆணிகளை பதித்தும் கம்பி வேலிகள் அமைத்தும் தடுப்பு அரண் அமைத்தனர்.

இதற்கு கடும் கண்டனங்கள் வந்ததால் பதித்த ஆணிகளை போலீசார் அகற்றி வருகிறார்கள். இந்த நிலையில் இதுகுறித்து ட்வீட் செய்துள்ள திருமாவளவன் எம்.பி. அமைதி வழியில் போராடும் குடிமக்களுக்கு எதிராக தில்லி எல்லையோரங்களில் தடுப்பு அரண்கள் மற்றும் ஆணிமுட்கள் பதிக்கிறது மோடி அரசு.

ஆதிக்க வெறிபிடித்த ஆட்சியாளர்களுக்குப் புத்தியில் உறைக்கும்படி பூஞ்செடி பதிக்கின்றனர் பொதுமக்களான வேளாண் குடிகள். உழைப்போருக்கு ஆக்கமே சிந்தனை என்று கூறியுள்ளார்.