டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு மது கொடுத்து உதவுங்கள் - முக்கிய பெண் அரசியல் பிரமுகரின் சர்ச்சை பேச்சு!

opportunity haryana donate
By Jon Feb 16, 2021 04:02 PM GMT
Report

ஹரியானா காங்கிரஸ் தலைவர் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு குடிக்க மதுவும் கொடுத்து உதவ வேண்டும் என கூறிய வீடியோ பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியான, உத்தரபிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் போராட்டத்தை நடத்தி வந்தனர்.

குடியரசு தினத்தன்று நடந்தபட்ட டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறைகாரணமாக காவல் துறையினர் தடியடியும் நடத்தினர். ஆனாலும் அதனை பொருட்படுத்தாமல் டெல்லியில் எல்லைப்பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தினை தொடர்கின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக சர்வதேச அளவில் குரல் எழுந்திருக்கிறது.

போராடும் விவசாயிகளுக்கு தண்ணீர், உணவு போன்றவற்றை பலரும் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஹரியானா காங்கிரஸ் தலைவர் வித்யா ராணி, விவசாயிகளின் போராட்டத்திற்கு காய்கறிகள்,நெய் ஆகியவற்றுடன் மதுவும் கொடுத்து உதவ பலரும் முன்வரவேண்டும் என்று தனது ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசியுள்ளார். எந்த அரசியல் கட்சிகளின் தலையீடு இல்லாமல் விவசாயிகளின் தலமையில் நடந்து வரும் இந்த போராட்டத்தை கொச்சை படுத்தும் விதமாக இவரது பேச்சு இருப்பதாக இணைய வாசிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

மேலிம், பழம் பெரும் தேசியகட்சியில் இருக்க கூடிய ஒரு பெண் தலைவர் விவசாயிகளுக்கு மது கொடுக்க வேண்டும் என கேட்கும் அந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையையும் சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.