தன் காரால் 3 பேரை நசுக்கி கொலை செய்ய முயன்ற டிரைவர் - நடந்தது என்ன? அதிர்ச்சி வீடியோ

Viral Video Delhi Accident
By Nandhini Oct 28, 2022 10:43 AM GMT
Report

டெல்லியில் கார் டிரைவர் ஒருவர் தன் காரால் 3 பேரை நசுக்கி கொலை செய்ய முயன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 பேரை கொலை செய்ய முயன்ற டிரைவர்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், கடந்த 26ம் தேதி இரவு டெல்லி, அலிபூர் பகுதியில் கார் டிரைவருக்கும், இளைஞர்களுக்கும் சிறு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த கார் டிரைவர், தன் காரால் அந்த 3 பேரையும் நசுக்கி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காரில் அடிப்பட்ட 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் 3 பேருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்ட கார் டிரைவர் சாரதியை போலீசார் உடனடியாக கைது அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

delhi-driver-car-accident-viral-video