டெல்லியில் மருத்துவர்கள் மீது போலீசார் தடியடி - நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்

strike delhi doctors
By Nandhini Dec 28, 2021 04:39 AM GMT
Report

முதுகலை மருத்துவப் படிப்பு சேர்க்கையை விரைவில் நடத்திடக் கோரிக்கை வைத்து டெல்லியில் மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பேரணியில் ஈடுப்பட்ட 1௦க்கும் மேற்பட்ட மருத்துவர்களை போலீசார் சிறைபிடித்துள்ளனர். இதைக் கண்டித்து நேற்று மாலை டெல்லி சரோஜினி நகர் காவல் நிலையம் முன்பு நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீசாரின் இந்த அடக்குமுறையைக் கண்டித்தும், முதுகலை மருத்துவப் படிப்பு சேர்க்கையும் வலியுறுத்தியும் நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை, அகில இந்திய மருத்துவர் சங்க கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது.

மருத்துவர்கள் மீதான அத்துமீறலை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வன்மையாக கண்டித்திருக்கிறது. இது குறித்து, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், "பூ தூவியது விளம்பரத்திற்கு, உண்மையில் அநீதிதான் தூவப் படுகிறது. மத்திய அரசின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக, நான் எப்போதும் கோவிட் போராளிகளுடன் துணை நிற்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.