டெல்லியில் திமுக அலுவலக திறப்பு விழாவில் ‘Karunanidhi A Life' புத்தகம் வெளியீடு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த கட்டிடத்துக்கு அண்ணா- கலைஞர் அறிவாலயம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இவ்விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஃபரூக் அப்துல்லா, ப.சிதம்பரம், சீதாராம் யெச்சூரி, அகிலேஷ் யாதவ், வைகோ, திருமாவளவன், திமுக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
டெல்லியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த திமுக அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குத்துவிளக்கு ஏற்றினார். பின்பு, டெல்லி அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார்.
திறப்பு விழாவில் ‘Karunanidhi-A Life’ என்ற ஆங்கில புத்தகத்தை இந்து என்.ராம் வெளியிட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பெற்றுக்கொண்டார். ‘A Dravidian Journey’ என்ற புத்தகத்தை வெளியிட்டார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சோனியா காந்தி, அகிலேஷ் யாதவுக்கு நினைவுப் பரிசு ஒன்றை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அந்த பரிசில் நாடாளுமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நடந்து வருவது போல் நினைவு பரிசு வழங்கப்பட்டது.