4 மணி நேரம் தாமதமாக வந்த டெலிவரி பாய்; பாட்டுப்பாடி ஆரத்தி எடுத்து வரவேற்ற நபர் - வைரலாகும் வீடியோ
தாமதமாக வந்த டெலிவரி பாயை, பாட்டுப்பாடி ஆரத்தி எடுத்து வரவேற்ற நபரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தாமதமாக வந்த டெலிவரி பாய்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் Zomatoல் உணவு ஆர்டர் செய்துள்ளார். 1 மணி நேரமாக காத்திருந்த அவருக்கு உணவு வரவில்லை. 2 மணி நேரமாக காத்திருந்த அவருக்கு உணவு வரவில்லை. டெலிவரி பாய் எப்போ வருவார்ன்னு வாசலில் வந்து வந்து காத்துக்கொண்டிருந்தார்.
3 மணி நேரமாகியும் டெலிவரி பாய் வராததால் கடுப்பான அவர் நூதனமாய் கலாய்க்க வேண்டும் என்று யோசித்துள்ளார். இதனையடுத்து, 4 மணி நேரம் கழித்து டெலிவரி பாய் உணவு கொண்டு வந்தார்.
அப்போது, அவரைப் பார்த்ததும் அந்த நபர் பாட்டுப்பாடி, ஆரத்தி எடுத்து, நெற்றியில் குங்குமம் வைத்து வரவேற்றுள்ளார்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், நூதனமாய் இவர் என்ன கலாய்.. கலாய்த்துள்ளார் என்று சிரித்துக்கொண்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.