பிக்பாக்கெட் - மோடி குறித்து ராகுலின் கருத்து..! டெல்லி நீதிமன்றம் உத்தரவு..!
மோடி குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிட்பாக்கெட் என விமர்சித்ததற்கு அவருக்கு டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராகுல் - மோடி விவகாரம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடியை விமர்சித்ததற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர், சுப்ரீம் கோர்ட் சென்று தனது பதவியை திரும்பபெற்றார்.
அதனை தொடர்ந்து அவர் மீது அமித் ஷா குறித்து பேசியதற்கு அவருக்கு உத்தரபிரதேச நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில் தான், அவருக்கு டெல்லி நீதிமன்றம் மற்றொரு தீர்ப்பை வழங்கியுள்ளது.
டெல்லி நீதிமன்றம்
உத்தரவு கடந்த மாதம் 22 ஆம் தேதி ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசிய போது, பிரதமர் மோடி குறித்து தெரிவித்த கருத்துக்கள் சுட்டிக்காட்டி டெல்லி உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
ராகுல் காந்தியின் பேச்சை குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ராகுல் காந்தியின் பேச்சு ஏற்கத்தக்கது அல்ல என்று நீதிமன்றம் தெரிவித்து, இது குறித்து 8 வாரங்களில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
ராகுல் காந்திக்கு ஏற்கனவே தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.