தீர்ப்பில் தவறுள்ளது - கெஜ்ரிவால் ஜாமீன்!! அதிரடியாக தடை விதித்த நீதிமன்றம்!!
நேற்று வழங்கப்பட்ட அர்விந்த் கெஜ்ரிவாலின் ஜாமீனிற்கு இடைக்கால தடை விதித்துள்ளது டெல்லி உயரநீதிமன்றம்.
கெஜ்ரிவால் வழக்கு
ஆம் ஆத்மீ கட்சி டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லி புதிய மதுபான கொள்கை விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைதாகினார். தேர்தல் சமயத்தில் இடைக்கால ஜாமீன் பெற்று வெளியில் வந்தவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அவரின் ஜாமீன் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பு அதாவது ஜூன் 2-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், மீண்டும் சிறை சென்றார். தேர்தல் முடிவுகளில் பஞ்சாப் மற்றும் டெல்லி இரண்டு இடங்களிலும் ஆம் ஆத்மீ கட்சி பெரியளவில் பின்தங்கியது.
குறிப்பாக அர்விந்த் கெஜ்ரிவால் ஆட்சி செய்து வரும் டெல்லியில் ஒரு இடம் கூட அக்கட்சிக்கு கிடைக்கவில்லை.
தள்ளுபடி
இந்த சூழல்களுக்கு மத்தியில், ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனு நேற்று பரிசீலனைக்கு வந்த போது, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது எம்.பி., எம்.எல்.ஏ'க்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம்.
இந்த தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்தது. அம்மானு இன்று விசாரிக்கப்பட்ட நிலையில், கெஜ்ரிவாலின் ஜாமீன் தீர்ப்பிற்கு தடை விதித்துள்ளது நீதிமன்றம்.
சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பில் தவறு உள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் வாதம் வைக்கப்பட்ட நிலையில், வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.