டெல்லி அணியில் மற்றொரு வீரருக்கு கொரோனா உறுதி - உச்சக்கட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா உறுதியாகி வரும் சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி கோலகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக வீரர்கள் மற்றும் அணியின் சக பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என அனைவரும் பயோ-பபுள் வளையத்தில் இருந்து வருகின்றனர்.
இதனிடையே கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் மூத்த பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபார்ஹார்ட்க்கு கொரோனா உறுதியானது. இதனைத் தொடர்ந்து ஆல்ரவுண்டரான மிட்சல் மார்ஷ், சமூக வலைத்தளக் குழுவைச் சேர்ந்த ஒருவர், டெல்லி அணி தங்கியுள்ள ஓட்டலைச் சேர்ந்த 3 ஊழியர்கள் உட்பட 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனால் டெல்லி அணி வீரர்கள் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடும் போட்டி புனேவில் இருந்து மகாராஷ்ட்ராவுக்கு மாற்றப்பட்டது. நேற்று நடந்த இப்போட்டியில் டெல்லி அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் டெல்லி அணியைச் சேர்ந்த வெளிநாட்டு வீரரான டிம் சீஃபர்ட்க்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சீஃபர்ட் கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்தபோது அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.