ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள ஒருவருக்கு கொரோனா உறுதி - அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக வீரர்கள் மற்றும் அணியின் சக பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என அனைவரும் பயோ-பபுள் வளையத்தில் இருந்து வருகின்றனர்.
இதுவரை 24 போட்டிகள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் முதல் முறையாக ஐபிஎல் அணியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் மூத்த பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபார்ஹார்ட்க்கு தான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஹோட்டல் அறையில் இருந்த டெல்லி அணி வீரர்களுக்கு வழக்கமான பரிசோதனைகள் எடுக்கப்பட்டதில் இது உறுதியானது. அடுத்த 7 நாட்களுக்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். நாளை டெல்லி அணி பெங்களூரு அணியை எதிர்கொள்ள உள்ள நிலையில் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் தனஞ்செயா கௌசிக் வீரர்களை பார்த்துக்கொள்வார் என கூறப்பட்டுள்ளது. ஆனால் மற்ற வீரர்களுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளதா என்பது வரும் நாட்களில் தெரியும் என்பதால் திட்டமிட்டபடி போட்டிகள் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.