Friday, May 23, 2025

டெல்லி அணியில் திடீர் திருப்பம் - கூடுதல் பலம் பெறுகிறாதா?

T20 Delhi Capitals World Cup
By Thahir 4 years ago
Report

ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து விலகிய கிறிஸ் வோக்ஸுக்குப் பதிலாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பென் டுவார்சிஸைத் தேர்வு செய்துள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி.

கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. துபாயில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.

டெல்லி அணியில் திடீர் திருப்பம் - கூடுதல் பலம் பெறுகிறாதா? | Delhi Capitals T20 World Cup

இங்கிலாந்து வீரர்களான பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகியோர் ஐபிஎல் போட்டியிலிருந்து ஏற்கெனவே விலகிவிட்டார்கள். கடந்த வார இறுதியில் ஜானி பேர்ஸ்டோ (சன்ரைசர்ஸ்), கிறிஸ் வோக்ஸ் (தில்லி கேபிடல்ஸ்), ஜாஸ் பட்லர், டேவிட் மலான் (ராஜஸ்தான் ராயல்ஸ்) ஆகிய இங்கிலாந்து வீரர்களும் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

ஐபிஎல் போட்டிக்குப் பிறகு டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் என நான்கு மாதங்களுக்குத் தொடர்ச்சியாக விளையாடி, கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருக்க வேண்டிய நிலைமை உள்ளதால் ஐபிஎல் போட்டியிலிருந்து இவர்கள் விலகியுள்ளதாக அறியப்படுகிறது.

இந்நிலையில் கிறிஸ் வோக்ஸுக்குப் பதிலாக ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் பென் டுவார்சிஸைத் தேர்வு செய்துள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி. டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை எடுத்துள்ள பென் டுவார்சிஸ், பிக் பாஷ் லீக் டி20 போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாடி அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 6-ம் இடத்தில் உள்ளார்.

இதற்கு முன்பு, 2018-ல் பஞ்சாப் அணிக்குத் தேர்வான டுவார்சிஸுக்கு, ஓர் ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. எட்டு ஆட்டங்களில் 12 புள்ளிகள் எடுத்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது தில்லி கேபிடல்ஸ் அணி. செப்டம்பர் 22-ல் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராகத் தனது முதல் ஆட்டத்தை விளையாடவுள்ளது.