மகளிருக்கு மாதம் ரூ.2500.. அமைச்சரவை ஒப்புதல் - மகளிர் தினத்தில் வெளியான அறிவிப்பு!
மகளிருக்கு மாதம் ரூ.2500 அளிக்கும் திட்டத்துக்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மகளிர்
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றாள் மகளிருக்கு மாதம் ரூ.2500 அளிக்கும் என்று வாக்குறுதி அளித்தது. அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று டெல்லி முதலமைச்சராக ரேகா குப்தா பொறுப்பேற்றார்.
இந்த நிலையில் முதலமைச்சர் ரேகா குப்தா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பாஜக மிக முக்கிய வாக்குறுதியான மகளிருக்கு மாதம் ரூ.2500 அளிக்கும் திட்டத்துக்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லி அரசு
மேலும் அதற்கான நிதியாக ரூ. 5100 கோடி ஒதுக்கவும் முடிவெடுக்கப்பட்டதாக டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்தார்.
மேலும் மகளிர் உதவித்தொகைத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான இணையதளம் விரைவில் தொடங்கப்படும் என டெல்லி அரசு கூறியுள்ளது.