டெல்லி கட்டிட தீ விபத்து - 27 பேர் உயிரிழப்பு அமைச்சர் தகவல்..!

Delhi
3 நாட்கள் முன்

டெல்லி கட்டிட தீ விபத்தில் இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்தறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே இன்று மாலை 3 மாடி வணிகக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் கட்டிடத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

தீ விபத்து தொடர்பாக காவல்துறை துணை ஆணையர் சமீர் ஷர்மா கூறுகையில் இதுவரை 50 மீட்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.   

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.