டெல்லியில் சீட்டு கட்டுபோல இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம் : காரணம் என்ன ?

Viral Video Delhi
By Irumporai Dec 05, 2022 12:55 PM GMT
Report

டெல்லி சாஸ்திரி நகரில் இன்று 4 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.

டெல்லியில் கட்டிடம் விபத்து

டெல்லி சாஸ்திரி நகரில் இன்று 4 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீடணைப்ப்பு படையினர் சமபவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

டெல்லியில் சீட்டு கட்டுபோல இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம் : காரணம் என்ன ? | Delhi Building Collapse Four Storey House

இடிந்து விழுந்த அந்த கட்டிடம் மிகவும் பழைமைவாய்ந்த கட்டிடம் என்பாதல் அங்கு மக்கள் யாரும் வசிக்கவில்லை என்று கூறப்படுகின்றது. மேலும் கட்டிடம் விழுந்த இடத்தில் தற்போது வரை உயிரிழப்பு எதுவும் இல்லை என்று கூறப்படுகின்றது.

வைரலாகும் வீடியோ

ஆனாலும் அந்த பகுதியில் சென்றவர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்ற நோக்கில் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.