டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தீவீரவாத தாக்குதலோடு தொடர்பு உடையது- இஸ்ரேல் தூதர் பகீர் தகவல்!

india attack terror
By Jon Feb 09, 2021 10:22 AM GMT
Report

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் இஸ்ரேலிய தூதரகம் மீது குறி வைக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் தெரிவித்து உள்ளார். டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே 150 மீட்டர் தொலைவில் நேற்று மாலை 5.05 மணியளவில் வெடிகுண்டு ஒன்று வெடித்தது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இதனால், அந்த பகுதியில் உள்ள சாலைகள் மூடப்பட்டது .மேலும் குண்டுவெடிப்பு சம்பவத்தின் காரணமாக டெல்லி, மும்பை, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர கண்காணிப்போடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த குண்டுவெடிப்புபற்றி இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரான் மல்கா இன்று கூறும்பொழுது, சம்பவ பகுதியில் இருந்து தடயங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருப்பதாக கூறினார். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் இஸ்ரேலிய தூதரகம் மீது குறி வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என்பது எங்களுடைய உறுதியான கணிப்பு.

நேற்று இந்த பயங்கரவாத தாக்குதல் நடந்தபொழுது, இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகள் முழு நடைமுறைக்கு வந்ததற்கான 29வது ஆண்டு தினமும் கொண்டாடப்பட்டது. ஆகவே, அனைத்து வகையிலும் விசாரணை மேற்கொள்ளப்படும். கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் தூதரகத்திற்கு சற்று தொலைவில் இஸ்ரேல் நாட்டு தூதர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் ஒன்று நடந்தது.

அதனுடன் இந்த தாக்குதல் தொடர்பு கொண்டிருக்கலாம். இந்த தாக்குதல் நடந்த விதம் அந்த வகையை சேர்ந்த ஒன்றாக இருக்கலாம் என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் தெரிவித்து உள்ளார்.